/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட் மீது பல்சர் பைக் மோதி தொழிலாளி பலி
/
மொபட் மீது பல்சர் பைக் மோதி தொழிலாளி பலி
ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர் : சத்தியமங்கலம் அருகே ராமபையலுாரை சேர்ந்தவர் சக்தி முருகன், 43, கூலி தொழிலாளி.
நம்பியூர் அருகே வரப்பாளையம் பகுதிக்கு கூலி வேலைக்கு, மொபட்டில் நேற்று காலை சென்றார். அழகம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது ராயர்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் ஓட்டி வந்த பல்சர் பைக், மொபட் மீது மோதியது. இதில் சக்தி முருகன் துாக்கி வீசப்பட்டு தலையில் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. விபத்தை ஏற்படுத்திய அருண்குமாரை, வரப்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.