/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்னம் பஞ்., அலுவலகம் முற்றுகை ஊழியர்களை உள்ளே விடாமல் வளைப்பு
/
புன்னம் பஞ்., அலுவலகம் முற்றுகை ஊழியர்களை உள்ளே விடாமல் வளைப்பு
புன்னம் பஞ்., அலுவலகம் முற்றுகை ஊழியர்களை உள்ளே விடாமல் வளைப்பு
புன்னம் பஞ்., அலுவலகம் முற்றுகை ஊழியர்களை உள்ளே விடாமல் வளைப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:18 AM
பவானி, பவானி அருகே புன்னம் பஞ்., பகுதிக்கு உட்பட்ட செங்கோடபாளையம், அம்மாச்சி கவுண்டன் கொட்டகை, அய்யம்பெருமாள் கொட்டகை, இந்திரா நகர் பகுதி மக்களுக்கு, ஆற்று குடிநீர் எந்நேரமும் கிடைக்கிறது. இந்நிலையில் தளவாய்பேட்டை பவானி ஆற்றில் இருந்து ஒலகடத்துக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒலகடம் வரை இரும்பு குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. புன்னம் வரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் செங்கோடபாளையம் பகுதியில் குழாய் அமைக்கப்படும். இரும்பு குழாய் அமைத்தால், இப்பகுதியில் தண்ணீர் வராது. ஆகவே இந்த கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்படும் குழாயுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள குழாயை இணைக்க வேண்டும்.
இதுகுறித்து பஞ்., அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதை
கண்டித்து, 50க்கும் மேற்பட்டோர் பஞ்., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அலுவலக ஊழியர்களை உள்ளே விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி யூனியன் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.