/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.34.67 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்
/
ரூ.34.67 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்
ADDED : மார் 03, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி;கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 34.67 லட்சம் ரூபாய்க்கு, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரையை நேற்று கொள்முதல் செய்தது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,530 முதல், 2,550 ரூபாய் வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,470 முதல், 2,500 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 1,385 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 34.67 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

