/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தள்ளுமுள்ளு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தள்ளுமுள்ளு
ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம், அந்தியூர் யூனியனிக்கு உட்பட்ட நகலுார், மைக்கேல்பாளையம் பஞ்.,க்களுக்கு மைக்-கேல்பாளையத்தில் நேற்று நடந்தது.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்க-டாச்சலம் துவக்கி வைத்தார். இதையடுத்து மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுக்க சென்றனர். டோக்கன் பெற்று வரிசையாக வருமாறு அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் மக்கள் டோக்கன் பெற முண்டியடிக்கவே நெரிசல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து மக்கள் அமைதியாக நீண்ட வரிசையில் வந்த பின் அதிகாரிகள் டோக்கன் வழங்கினர். இதன் பிறகு அதி-காரிகளிடம் மனுவை வழங்கி சென்றனர்.

