/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு
/
அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு
ADDED : ஆக 23, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, :அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், பாலமலை அடிவாரத்தில், மணி என்பவர் தனது தோட்டத்தில், தீவன பயிர் அறுவடையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
அப்போது பயிர் நடுவே மலைப்பாம்பு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டார். அப்பகுதி மக்கள் சென்றபோது, 9 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து லாவகமாக பிடித்து, சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.