/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடியிருப்பு பகுதி புதரில் சிக்கிய மலைப்பாம்பு
/
குடியிருப்பு பகுதி புதரில் சிக்கிய மலைப்பாம்பு
ADDED : நவ 22, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியிருப்பு பகுதி புதரில்
சிக்கிய மலைப்பாம்பு
புன்செய்புளியம்பட்டி, நவ. 22-
பவானிசாகர் பேரூராட்சி கனகரத்தினம் நகர் குடியிருப்பு பகுதியில், புதர் மண்டி கிடப்பதால் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
அப்போது புதருக்குள், 12 அடி நீள மலைப்பாம்பு படுத்திருப்பதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.