/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தேர்தல் வெற்றியை விட நாடு காக்கப்பட வேண்டியது அவசிய
/
'தேர்தல் வெற்றியை விட நாடு காக்கப்பட வேண்டியது அவசிய
'தேர்தல் வெற்றியை விட நாடு காக்கப்பட வேண்டியது அவசிய
'தேர்தல் வெற்றியை விட நாடு காக்கப்பட வேண்டியது அவசிய
ADDED : மே 02, 2024 07:29 AM
ஈரோடு, : ஈரோட்டில், ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., சார்பில் மே தின விழா பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே புறப்பட்ட பேரணி, வீரப்பன்சத்திரத்தில் நிறைவடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேசியதாவது:
தமிழகம் - புதுச்சேரியில், 40 இடங்களிலும் இண்டியா கூட்டணி வெல்லும். கேரளாவில் நாங்களும், காங்கிரசும் தனித்து நின்றாலும், கூட்டணியாக தலா, 10 சீட்டு என நின்றிருந்தாலும் இந்தியா கூட்டணிதான் வென்றிருக்கும். நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது.
யார் வெல்கிறார்கள் என்பது பிரச்னை இல்லை. இந்த நாடு, நாட்டின் அரசியலமைப்பு சட்டம், அதனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள், ஜனநாயகம், மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும். நீதிமன்றம், சி.பி.ஐ., - ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை இருக்க வேண்டும் என்பதுடன், சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவை தற்போது, பிரதமரின் உத்தரவுக்காக காத்திருக்கும் நிலை மாற வேண்டும். தேர்தல் வெற்றியை விட நாடு காக்கப்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு பேசினார்.
மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராதிகா, கணேஷ், சந்திரன், விஜயராகவன், சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர்.

