ADDED : ஜூலை 01, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், 2.84 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். கால்நடைகளை கோமாரி நோய்
தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்பு துறை மூலம் இலவசமாக
தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டு இன்று முதல் வரும், 10ம்
தேதி வரை மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்கள், வருவாய் கிராமங்கள்,
டவுன் பஞ்.,கள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளிலும், 9 வது
சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக, 114
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 2 லட்சத்து, 84,300
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
