ADDED : ஜூலை 01, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மாட்டிறைச்சி
விலையை உயர்த்த வலியுறுத்தி, ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதியில்
மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகள், இரண்டாவது நாளாக நேற்றும்
விற்பனை நிறுத்தம் செய்தனர்.
இதனால் ஈரோடு மாநகராட்சி
பி.பி.அக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம், வெண்டிப்பாளையம்
பகுதிகளில், 60 மாட்டிறைச்சி கடைகள் நேற்றும் திறக்கப்படவில்லை.
இதன் மூலம், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைஇழந்தனர்.
