ADDED : ஜூலை 01, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கோபி
அருகேயுள்ள கடத்துார் தாச நாயக்கனுாரை சேர்ந்தவர் சக்திவேல், 38;
இண்டியம்பாளையம் பகுதி தனியார் மில்லில் கார் டிரைவராக வேலை
செய்தார்.
மது அருந்தி விட்டு செம்படாபாளையம் பகுதியில் உள்ள பவானி
ஆற்றில் நேற்று முன்தினம் மதியம் குளித்துள்ளார். அப்போது ஆழமான
பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சத்தி போலீசார் உடலை
மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சக்திவேலுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
