ADDED : ஜூலை 01, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
திண்டல் சக்தி நகர் நான்காவது கிராஸ் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்
பாஸ்கரன். பேக்கரி ஒன்றில் டிரைவராக வேலை செய்கிறார். பாஸ்கரன்
மனைவி தேன்மொழி, 34;
இவர் அதே பகுதியில் ஒரு ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு
சென்று வந்தார். ஒரு மாதமாக தேன்மொழி வேலைக்கு செல்லாத நிலையில், 26ம்
தேதி மதியம் வெளியே சென்றவர் மாயமாகி விட்டார். வீட்டிலேயே
மொபைல்போனை வைத்து சென்று விட்டார். பாஸ்கரன் புகாரின்படி தாலுகா
போலீசார் தேடி வருகின்றனர்.
