/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உதயநிதி பிறந்தநாளை ஒட்டி கள்ளிப்பட்டியில் ரேக்ளா ரேஸ்
/
உதயநிதி பிறந்தநாளை ஒட்டி கள்ளிப்பட்டியில் ரேக்ளா ரேஸ்
உதயநிதி பிறந்தநாளை ஒட்டி கள்ளிப்பட்டியில் ரேக்ளா ரேஸ்
உதயநிதி பிறந்தநாளை ஒட்டி கள்ளிப்பட்டியில் ரேக்ளா ரேஸ்
ADDED : டிச 03, 2024 01:52 AM
உதயநிதி பிறந்தநாளை ஒட்டி
கள்ளிப்பட்டியில் ரேக்ளா ரேஸ்
டி.என்.பாளையம், டிச. 2--
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில், ஒன்றிய தி.மு.க., மற்றும் தொண்டரணி சார்பில், மாரத்தான் ஓட்டம் மற்றும் குதிரை ரேக்ளா ரேஸ் நேற்று நடந்தது. மாரத்தானில் ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர் என, 650 பேர் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளாக போட்டி நடந்தது. மாரத்தான் போட்டியை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது. இதில், 30 குதிரை வண்டிகள் பங்கேற்றன. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தொடங்கி வைத்தார். மாரத்தானில் முதல் மூன்று இடங்களையும், ரேக்ளா பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும்
ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.