/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராகவேந்திர சுவாமி பிறந்த நாள் விழா
/
ராகவேந்திர சுவாமி பிறந்த நாள் விழா
ADDED : மார் 07, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரிக்கரையில், ராகவேந்திரா சுவாமி கோவில் உள்ளது. இங்கு ராகவேந்திரரின், 430வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நிர்மால்யா பூஜை நடந்தது.
தொடர்ந்து ராகவேந்திரருக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வஸ்திரம் சாத்தி பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின் தேரில் எழுந்தருளிய பிரகலாதர் கோவிலை வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.