/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராகுலும், ஸ்டாலினும் பிரதமரை தீர்மானிப்பார்கள்; இளங்கோவன்
/
ராகுலும், ஸ்டாலினும் பிரதமரை தீர்மானிப்பார்கள்; இளங்கோவன்
ராகுலும், ஸ்டாலினும் பிரதமரை தீர்மானிப்பார்கள்; இளங்கோவன்
ராகுலும், ஸ்டாலினும் பிரதமரை தீர்மானிப்பார்கள்; இளங்கோவன்
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, கச்சேரி வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், தனது ஓட்டை பதிவு செய்த தமிழக காங்., முன்னாள் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ., இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தேர்தலின் முடிவுகள் ராகுல் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கரங்களை பலப்படுத்தும் வகையில் அமையும்.
'இண்டியா' கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். யார் பிரதமராக வருவது என்பதை பற்றி எல்லாம் ஸ்டாலினை போன்றவர்கள், ராகுலை போன்றவர்கள் முடிவு செய்வார்கள். அதில் எந்த வித பிரச்னையும் வராது. இவ்வாறு கூறினார். மனைவி வரலட்சுமி, மகன் சஞ்சய் சம்பத் ஆகியோரும் அவருடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.