ADDED : ஜூன் 16, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு டீசல் லோகோ ஷெட் பகுதியில், அபிவிருத்தி பணிக்-காக அங்கிருந்த மரம், செடி, கொடி வெட்டி அகற்றப்பட்டது. இதற்கு மாற்றாக ஈரோடு ரயில்வே
காலனியில், ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய இடத்தில், 2019 அக்-டோபரில் நர்சரி அமைக்கப்பட்டது.
இதில் பல்வேறு வகை மரம், செடி, கொடி வைக்கப்பட்டிருந்-தது. நர்சரி மேலும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், அப்போ-தைய கோட்ட மேலாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு நர்சரி முற்றிலும் அழிக்கப்-பட்டுள்ளது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக நர்சரி அகற்றப்பட்டதாக தெரிகிறது. வளர்ச்சி பணியை காரணம் காட்டி நர்சரியை முற்றிலும் அழித்தது அதிர்ச்சி அளிக்கிறது. வேறு பகுதியில் நர்சரி அமைக்க கோரிக்கை
எழுந்துள்ளது.