/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே தொழிலாளர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே தொழிலாளர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தட்சின் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.,) சார்பில் நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எலக்ட்ரிக்கல் லோகோஷெட் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.
ஈரோடு எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட்டில் காலியாக உள்ள, 142 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வேலைப்பளுவால் ஏற்படும் சிறு தவறுகளுக்கு சார்ஜ் ஷீட் வழங்குவதை கைவிட வேண்டும். பணிபுரியும் இடத்தில் நடக்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஓடோமாஸ் வழங்க வேண்டும். மழை காலத்தில் மழை நீர் ஒழுகாத வண்ணம் ஷெட்டின் மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.

