ADDED : பிப் 01, 2024 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஈரோட்டில் நேற்று எஸ்.ஆர்.இ.எஸ்.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காலி பணியிடங்களை நிரப்பாததால் தற்போது ரயில் டிரைவர்கள், 72 மணி நேரத்துக்கு மேல் வீடு திரும்பாமல் பணியாற்றுகின்றனர். வாராந்திர ஓய்வு மறுக்கப்படுவதால் தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
ரயில்வே போர்டு உத்தரவை மதிக்காமல் இடமாறுதலை அமல்படுத்தாத சேலம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் எஸ்.ஆர்.இ.எஸ்.(சதர்ன் ரயில்வே எம்ப்ளாயிஸ் சங்கம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
லோகோ ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் பிரபு தலைமை வகித்தார். கோட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் சரவணன் பேசினார்.