/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே ஊழியர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 03, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன், சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிளை மேலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாமல், ஊழியர்கள் மீது வேலைப்பளுவை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும். ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பை மாற்றம் செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.