/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெண்டிபாளையம் பகுதியில் ரயில்வே:நுழைவு பாலம் அமைக்க வலியுறுத்தல்
/
வெண்டிபாளையம் பகுதியில் ரயில்வே:நுழைவு பாலம் அமைக்க வலியுறுத்தல்
வெண்டிபாளையம் பகுதியில் ரயில்வே:நுழைவு பாலம் அமைக்க வலியுறுத்தல்
வெண்டிபாளையம் பகுதியில் ரயில்வே:நுழைவு பாலம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 02, 2025 01:40 AM
ஈரோடு;ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து, வெண்டிபாளையம் வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் செல்கின்றன. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர காலத்தில், ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஈரோடு பழைய ரயில்நிலையம் அமைந்துள்ள பகுதியான, வெண்டிபாளையத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தவிர பொதுப்பணித்துறை அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம், கல்வித்துறை அலுவலகங்களும் உள்ளன. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதேபோல் மொடக்குறிச்சி, சோலார் மார்க்கமாக ஈரோட்டுக்கு வாகனங்களில் வருகின்றனர். மோளக்கவுண்டன் பாளையம், வெண்டிபாளையம் பகுதியில் இரண்டு ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக அதிக ரயில்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி கேட் மூடியிருக்கும். இதனால் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்து செல்வர்.
பல ஆண்டுகளாக, இரண்டு இடத்திலும் நுழைவு பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு மோளக்கவுண்டன் பாளையத்தில் ரயில்வே நுழைவு பாலம் கட்டித் தரப்பட்டது. ஆனால் வெண்டிபாளையத்தில் இன்னும் கட்டப்படவில்லை. கடந்த, 2016ல் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசும், ரயில்வே துறையும் இணைந்து வெண்டிபாளையத்தில் மேம்பாலம் அல்லது நுழைவுபாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.