/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்: அத்தாணி சாலையில் நெரிசல்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்: அத்தாணி சாலையில் நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்: அத்தாணி சாலையில் நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்: அத்தாணி சாலையில் நெரிசல்
ADDED : அக் 02, 2025 01:39 AM
கோபி,:கோபி-ஈரோடு சாலையில் உள்ள பாரியூர் பிரிவு வழியாக, அத்தாணி மற்றும் அந்தியூர் செல்லும் வாகனங்கள், அதிகளவில் பயணிக்கின்றன. அப்பகுதியில் பிரதான சாலையை ஆக்கிரமித்து, டூவீலர் மற்றும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி தாறுமாறாக நிறுத்துகின்றனர்.
இதனால் கோபி மற்றும் அந்தியூர் சாலையில் படையெடுக்கும் வாகனங்கள் சீராக பயணிக்க வழியின்றி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தினமும் மாலை மற்றும் இரவு நேரத்தில், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கோபி போக்குவரத்து பிரிவு போலீசார், அப்பகுதியில் தணிக்கை செய்து வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்பவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.