/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில்ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
/
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில்ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில்ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில்ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
ADDED : அக் 02, 2025 01:39 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில், ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று ஈரோடு மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகங்களில் வாகனங்களுக்கும், வேலைக்கு பயன்படுத்தும் இயந்திரங்களுக்கும் மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். மாலையில், அம்மன் கோவில்களான பெரிய மாரியம்மன், கொங்கலம்மன், பத்ரகாளியம்மன் கோவில்களில் நடந்த நவராத்திரி விழாவில், ஏராளமானோர் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர்.
* நவராத்திரி நிறைவாக விஜயதசமி கொண்டாட்டம் இன்று நடக்கிறது. அதேபோல் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், காங்கேயம் பகுதி கடைவீதியில் பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
* அத்தாணி அருகே, கீழ்வாணியில் உள்ள பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு, பைக், கார், டெம்போ, டிராக்டர் போன்ற வாகனங்களை ஆற்று தண்ணீரில் சுத்தம் செய்ய, ஏராளமான வாகன ஓட்டிகள் வந்தனர். வாகனங்களை சுத்தசெய்து, வாழைக்கன்றுகள் கட்டியும், மாலை அணிவித்தும் பூஜை செய்து, பொதுமக்களுக்கு பொரி, பழம் வழங்கினர்.
* ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் அருகே, பன்னீர்செல்வம் பார்க் ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது, அனைத்து ஆட்டோக்களும் சாலையில் ஊர்வலமாக சென்றன. இதேபோல், சோலார் புதிய பஸ் ஸ்டாண்டில், இந்து ஆட்டோ முன்னணி சார்பில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகிலும், பொரிக்கடை கார்னர், அரசு மருத்துவமனை கார்னர், தேர்வீதி, தவிட்டுப்பாளையம் பூக்கடை கார்னர், மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில், பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. தவிட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும், விசைத்தறி, கைத்தறி கூட உரிமையாளர்களும், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்று படைத்து வழிபட்டனர்.