ADDED : அக் 15, 2025 12:53 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு இடி-மின்னலுடன் தொடங்கிய மழை, சிறிது நேரத்தில் சற்றே வலுத்து விட்டு விட்டு, 2 மணி நேரம் பெய்தது. விடியற்காலை, 4:30 மணிக்கு நின்றது. மழையால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை வெயில் தாக்கம் குறைந்து வானம் மந்தமாக காட்சியளித்தது.
* பவானி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. மதியம், 3:20 மணியக்குப் பிறகு காடையாம்பட்டி, சேர்வராயன்பளையம், எலவமலை, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில், 20 நிமிடம் மழை பெய்தது, இதனால் சூழல் இதமாக மாறியது.
௨வது நாளாக மழை
ஈரோடு மாநகரில் பரவலாக, இரண்டாவது நாளாக நேற்றும் மழை பெய்தது. மாலை, 6:25 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கி ஓய்ந்தது. மீண்டும், ௮:௧௫ மணிக்கு தொடங்கி, ௮:௪௫ மணிக்கு முடிந்தது. மழையால் சூழல் இதமாக மாறினாலும், ஜவுளி எடுக்க வந்த
மக்களும், ஜவுளி சந்தைக்கு வந்தவர்களும், அவதிக்கு ஆளாகினர்.
* மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வரட்டுபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 57.20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-7.20, மொடக்குறிச்சி-54, கொடுமுடி-2.40, சென்னிமலை-11.60, பவானி-2.50, அம்மாபேட்டை-7.60, கோபி-2.10, கொடிவேரி அணை-14.60, நம்பியூர், சத்தியில் தலா-6 மி.மீ., மழை
பதிவானது.