தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு, தாராபுரத்தில் மழை

ஈரோடு, தாராபுரத்தில் மழை

ஈரோடு, தாராபுரத்தில் மழை


ADDED : ஜூன் 03, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 4:45 மணியளவில் சாரல் மழை துவங்கியது. இந்த மழை, 30 நிமிடங்கள் நீடித்தது. மழைக்கு நடுவில் பலத்த காற்றுடன் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் அடித்தது. இதையடுத்து இரவு 8:00 மணி வரை விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது.

* தாராபுரத்தில் மாலை 6:00 மணியளவில் சாரல் மழை பெய்தது. குண்டடம் பகுதியில் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது.

* பெருந்துறை மற்றும் சுற்று பகுதிகளில் மாலை 5:00 முதல் 6:00 மணி வரை மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us