திண்டல் வேளாளர் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா
திண்டல் வேளாளர் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 03, 2026 03:35 AM

ஈரோடு:ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 21-வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எச்.சி.எல்., டெக் இயக்குனர், தலைவர் மற்றும் எஸ்.எச்.ஆர்.எம்., மூத்த சான்றளிக்கப்பட்ட நிபுணர் பிரசாத், 816 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
மேலும், அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த, 53 மாணவ, மாணவியரை பாராட்டினர். தொடர்ந்து அவர் பேசுகையில், 'பட்டதாரிகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். தங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும், வேலையையும், வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தவும் கேட்டுக்கொண்டார். மேலும், உண்மையாக இருங்கள் வெற்றி எப்போதும் உங்களுடையது' என்றார்.நிகழ்ச்சியில், செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், இணை செயலாளர் ராஜமாணிக்கம், அறக்கட்டளை உறுப்பினர்கள் குலசேகரன், வேலுமணி, பாலசுப்பிரமணியம், யுவராஜா ஆகியோர் தலைமை வகித்து நடத்தினர். முதல்வர் ஜெயராமன் வரவேற்றார். புல முதல்வர், நிர்வாக மேலாளர் பெரியசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
