தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஜூன் 03, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர், சதீஸ்குமார்,54; டிரைவர். இவரது மனைவி, தமிழ்ச்செல்வி,49, கோபி கச்சேரிமேட்டில் உள்ள மருந்துக்கடையில் பணிபுரிந்தார்.

கடந்த, 11ல் வெளியே சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுகுறித்து அவரின் கணவர் சதீஸ்குமார், கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.* ஈரோடு, மலையம்பாளையம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த பினாயக் மஞ்ஜி மனைவி சுஷ்மா ஜானி, 24, வசித்து வந்தனர். தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 28 இரவு ஷிப்ட் பார்த்து விட்டு பினாயக் மஞ்ஜி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். 29 மதியம் பினாயக் மஞ்ஜியிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி, சுஷ்மா ஜானி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு அவர் வரவில்லை. பினாயக் மஞ்ஜி பல இடங்களில் தேடியும் மனைவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதுபற்றி மலையம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம் பெண் மாயம்

ஈரோடு, பெரியவலசு, கொங்கு நகர், 3வது வீதியை சேர்ந்த ராஜூ மகள் சிம்ரன்,15. இவர்கள் சொந்த ஊர் உத்ரபிரதேசம் வாரணாசி. ராஜூ தறிபட்டறை தொழிலாளி. கடந்த 27 மாலை கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சிம்ரன், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிம்ரன் குறித்து தகவல் இல்லை. இதுபற்றி சிம்ரன் தாய் ரெகானா அளித்த புகாரின் படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us