ADDED : ஜூன் 27, 2026 01:22 AM
ஈரோடு; ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு வானம் மேகமூட்டமாக மாறிய நிலையில், பலத்த காற்று வீசியது.
அதை தொடர்ந்து பத்து நிமிடத்தில் பலத்த மழை பெய்ய துவங்கியது. அரை மணி நேர இடைவெளியில் வேகம் குறைவதும், அதிகரிப்ப-துமாக மாறி மாறி பெய்தது. மாலை, 6:00 மணிக்கு மழை நின்றது. ஆனால், 6:15 மணிக்கு மீண்டும் வெளுத்து வாங்க ஆரம்பித்தது. 20 நிமி-டத்தில் முழுவதுமாக நின்றது. இருமுறை கொட்டிய கனமழையால், வழக்கம்போல் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வளாகம் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.அதேசமயம் மழையால் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதிகளில் சாலையோர காய்கறி, ஜவுளி கடைகளில் மாலை நேர வியாபாரம் பாதித்தது. ஆர்.கே.வி ரோடு, காளைமாட்டு சிலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, வீரப்பன்சத்-திரம் உள்ளிட்ட பகுதி சாலைகளில் வழக்-கம்போல் கழிவுநீருடன் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
