/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில் கோபியில் நடப்பாண்டில் மழையளவு சரிவு
/
ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில் கோபியில் நடப்பாண்டில் மழையளவு சரிவு
ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில் கோபியில் நடப்பாண்டில் மழையளவு சரிவு
ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில் கோபியில் நடப்பாண்டில் மழையளவு சரிவு
ADDED : நவ 01, 2024 01:23 AM
ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில்
கோபியில் நடப்பாண்டில் மழையளவு சரிவு
கோபி, நவ. 1-
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவில், கடந்த ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இதுவரை சராசரி மழையளவு கூட பெய்யவில்லை.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவில், மாதந்தோறும் பெய்ய வேண்டிய, சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜன., 18.5 மி.மீ., பிப்.,14.5, மார்ச், 21.6, ஏப்., 54.9, மே., 90.4, ஜூன், 37.1, ஜூலை 40.4, ஆக.,75.4, செப்.,100.3, அக்.,191.5, நவ., 118.6, டிச., 22.1 என மொத்தம், 12 மாதங்களில், 785.3 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.
அதன்படி, கடந்த, 2018ல், 965 மி.மீ., 2019ல், 700 மி.மீ., 2020ல், 966 மி.மீ., 2021ல், 1,212 மி.மீ., 2022ல், 1,213 மி.மீ., 2023ல், 918 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், சராசரி மழையளவுடன், ஆண்டு வாரியாக ஒப்பிட்டால், கடந்த, 2018ல், 179 மி.மீ., கூடுதலாகவும், 2019ல், 85 மி.மீ., குறைவாகவும் பெய்துள்ளது.
இதையடுத்து, கடந்த, 2020ல், 180 மி.மீ., 2021ல், 427 மி.மீ., 2022ல், 428 மி.மீ., 2023ல், 133 மி.மீ., கூடுதலாக மழை பெய்துள்ளது. நடப்பாண்டு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடந்த 11 மாதத்தில், 774 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. அதனால், சராசரி மழையளவை தொட, இன்னும் 11 மி.மீ., கூடுதலாக மழை பெய்ய வேண்டும். தவிர, வரும் டிசம்பர் மாதத்தில், சராசரி மழையளவாக 22.1 மி.மீ., மழை பெய்ய வேண்டும். அதேசமயம், இதுவரையில் டிசம்பர் மாதத்தில், கடந்த, 2018ல், 2 மி.மீ., மழையும், 2019ல் 13.4, 2020ல், 60.8, 2021ல், 14.2, 2022ல், 45.2 மி.மீ., 2023ல், ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. இதனால் வரும் டிசம்பர் மாதத்தில் 11 மி.மீ., மழை பெய்தால் மட்டுமே, நடப்பாண்டுக்கான சராசரி மழைளவை தொட முடியும் சூழல் உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கோபி தாலுகாவில் சராசரி மழையளவு கூட பெய்யாமல், மழையளவு குறைந்துள்ளதாக, அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

