ADDED : ஆக 24, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று மதியம், வானம் மேக மூட்டமாக மாறிய நிலையில், மாலை, 4:00 மணிக்கு துாறல் மழை பெய்தது. அதை தொடர்ந்து, 4.15 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அதன்பின் வேகம் குறைந்து சாரலாக மாறி நின்றது. மழையால் வழக்கம்போல் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கியது. மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கியது. மீண்டும் இடைவெளி விட்டு துாறலுடன் குளிர்காற்று இரவு வரை வீசியதால், வெப்பத்தின் தாக்கம் அடியோடு பறந்தது.
