ADDED : ஆக 24, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகரை
அடுத்த நாதகவுண்டன் புதுாரில் மகா கணபதி, சக்தி மாரியம்மன் கோவில்
புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா
நடந்தது.
முன்னதாக காலையில் சிவ வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள்
முழங்க, யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு
செல்லப்பட்டு, கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம்
நடந்தது. அதை தொடர்ந்து மூலவர் மகா கணபதி, சக்தி மாரியம்மன் மற்றும்
பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார
பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
