/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொள்முதல் நிலையத்தில் புகுந்த மழை நீர்: 400 நெல் மூட்டைகள் நாசம்
/
கொள்முதல் நிலையத்தில் புகுந்த மழை நீர்: 400 நெல் மூட்டைகள் நாசம்
கொள்முதல் நிலையத்தில் புகுந்த மழை நீர்: 400 நெல் மூட்டைகள் நாசம்
கொள்முதல் நிலையத்தில் புகுந்த மழை நீர்: 400 நெல் மூட்டைகள் நாசம்
ADDED : அக் 11, 2025 12:37 AM
கோபி, கோபி தாலுகா பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. கோபி அருகே புதுக்கரைப்புதுாரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கனமழையால் வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. நிலமட்டத்தில் தார்பாய் விரித்து, அதன் மீது நெல்லை குவியலாக, மூட்டையாக வைத்திருந்தனர். அதற்குள் மழைநீர் புகுந்தது. இதையறிந்த விவசாயிகள் நேற்று காலை கொள்முதல் நிலையத்துக்கு விரைந்தனர். மழையால் நனைந்த நெல் மணிகளை உலரவைத்து அவதிப்பட்டனர். இங்கு, ௩௦௦ மூட்டை நெல் மழையில் நனைந்து விட்டதாக தெரிகிறது.
இதேபோல் பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவில் அருகே இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்திலும் மழை நீர் புகுந்து, நுாறு நெல் மூட்டைகள் வரை நனைந்து சேதமானது.
இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது:
புதுக்கரைப்புதுார் கொள்முதல் நிலையத்துக்கு நெல் கொண்டு வந்து, பத்து நாட்களை கடந்தும், எடை போட்டு லாரிகளில் ஏற்றி செல்லவில்லை. இதனால் நெல்லை பாதுகாக்க தார்பாய் வாடகை, பராமரிப்பு செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை புதுக்கரைப்புதுாரில், 323 பேர் டோக்கன் பெற்றதில், 123 பேரின் நெல் மூட்டை மட்டுமே எடுத்து செல்லப்பட்டுள்ளது. எஞ்சிய, 200 விவசாயிகளின் நெல், இன்னும் எடையாகி மூட்டையாகமால் தேங்கி உள்ளது.
மூட்டையாக, குவியலாகவும் உள்ள நெல்மணி, மழையில் நனைவதால் நாற்றாக முளைத்து விடும். எனவே மாவட்ட நிர்வாகம் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் விரைந்து நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.