/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொல்லம்பாளையத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
/
கொல்லம்பாளையத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ADDED : செப் 20, 2025 01:40 AM
ஈரோடு, ஈரோட்டில் நேற்று மாலை கொட்டிய மழையால், கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதி வெள்ளக்காடானது.ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 5:30 மணிக்கு மிதான வேகத்தில் ஆரம்பித்த தொடங்கிய மழை சில நிமிடங்களில் கனமழையாக உருவெடுத்தது.
குறிப்பாக ரங்கம்பாளையம், நசியனுார் ரோடு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வீரப்பன்சத்திரம், பெரியவலசு, பவானி ரோடு பகுதிகளில் மிதமான வேகத்தில் சாரல் மழை பெய்தது. 6:15 மணிக்கு பின் அனைத்து பகுதிகளிலும் துாறல் மழையாக நீடித்தது.
கனமழையால் ரயில் நிலைய சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாநகராட்சி, 59வது வார்டு கொல்லம்பாளையம் அருகில் கட்டபொம்மன் வீதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகளை, கழிவுநீருடன் மழைநீர் சூழ்ந்தது.
ஒரு சில வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மழை நின்றவுடன் மழை நீரை பாத்திரங்களில் அள்ளி குடியிருப்புவாசிகள் வெளியேற்றினர். இப்பகுதியில் சாக்கடையை துார் வாராததே இதற்கு காரணம் என்றும், மக்கள் வேதனை தெரிவித்தனர்.
* பெருந்துறையில் மாலை, 5:00 மணிக்கு பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. மாலை, 6:00 மணி வரை ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு லேசான மழை வெகுநேரம் பெய்தது.
* பவானியில் மதியம், 3:30 மணிக்கு தொடங்கிய மழை, ௫:௦௦ மணி வரை பெய்தது. இதேபோல் சேர்வராயன்பாளையம், காடையாம்பட்டி, சின்னவடமோளபாளையம், ஜம்பை, கருக்குபாளையம், திப்பிசெட்டிபாளையம், தொட்டிபாளையம் பகுதிகளிலும் மழை பெய்தது.
* சென்னிமலை பகுதியில் நேற்று நள்ளிரவு, 1:30 மணி முதல் அதிகாலை, 4:௦௦ மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது துாரல் மழையும் பெய்தபடி இருந்தது. மாலை, 4:30 மணிக்கு கனமழை கொட்டியது. இதனால் சாலைகள் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது.