sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து ரஜினி ரசிகர்கள் போராட்டம்

/

கூலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து ரஜினி ரசிகர்கள் போராட்டம்

கூலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து ரஜினி ரசிகர்கள் போராட்டம்

கூலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து ரஜினி ரசிகர்கள் போராட்டம்


ADDED : ஆக 15, 2025 03:23 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், கூலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால், ரஜினி ரசிகர்கள் நாமக்கல்லில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினிகாந்த் நடிப்பில், கூலி திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள கே.எஸ்., தியேட்டரில் சிறப்பு காட்சி ஏதும் இல்லை என தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது.

சில நாட்களுக்கு முன், 800 இருக்கைகளுக்கும், 3 லட்ச ரூபாய் கொடுத்து ரஜினி ரசிகர்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிய நிலையில், இரு நாட்களுக்கு முன் சிறப்பு காட்சி ஏதும் இல்லை என கூறி, புக் செய்த டிக்கெட்டுக்கான பணத்தை தியேட்டர் நிர்வாகம் திருப்பி தந்துள்ளனர்.

முதல் நாள் காலை, 9:00 மணிக்கு சிறப்பு காட்சி இங்கு திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரஜினி ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தியேட்டர் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us