/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் 100 சதவீத தேர்ச்சி
/
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் 100 சதவீத தேர்ச்சி
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் 100 சதவீத தேர்ச்சி
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 08, 2024 02:26 AM
ஈரோடு:ஈரோடு
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவி
எஸ்.கனிஷ்கா, 591 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.
மாணவி
எல்.ஆர்.கமலினி, 590 எடுத்து இரண்டாமிடம்; எஸ்.பொன் பாரதி, 589 எடுத்து
மூன்றாமிடம் பெற்றனர். தேர்வெழுதிய, 337 மாணவ,மாணவியரும் முதல்
வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர்.கணினி அறிவியல் பாடத்தில், -41 பேரும்,
வணிகவியல் பாடத்தில், -12 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில், -9
பேரும், பொருளியல் பாடத்தில், -6 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில்,
-4 பேரும், இயற்பியல் மற்றும் கணிதத்தில் தலா ஒருவரும் 100/100
மதிப்பெண் பெற்றனர்.
தமிழில் ஒன்பது பேர், வேதியியலில் மூன்று பேர்,
சமஸ்கிருதத்தில் ஒருவர், 99 மதிப்பெண் எடுத்தனர். தேர்வெழுதிய, 337
பேரில், 550-க்கு மேல் 52 பேரும், 500 க்கு மேல், 145 பேரும், 450க்கு மேல்
239 பேரும், 400க்கு மேல் 307 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர்.
சாதனை
படைத்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த முதல்வர், ஆசிரியர்கள்,
அலுவலக பணியாளர்களை, கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
தலைவர் சின்னசாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன், உதவித்
தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, உதவி செயலாளர்
மீனாட்சிசுந்தரம், பொருளாளர் நாகராஜ் மற்றும் செயற்குழு, பொதுக்குழு
உறுப்பினர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

