/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரட்டுப்பள்ளம் பகுதியில் தென்பட்ட அரிய பறவைகள்
/
வரட்டுப்பள்ளம் பகுதியில் தென்பட்ட அரிய பறவைகள்
ADDED : மார் 17, 2025 04:30 AM
அந்தியூர: அந்தியூர், பர்கூர் வனம் தந்தை பெரியார் வன உயிரின சரணால-யமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது சர-ணாலயத்துக்கு உட்பட்ட அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் பகுதியில், அந்தியூர் வனச்சரகர் முருகேசன் தலைமையில், வனத்-துறை ஊழியர்கள், பறவை ஆர்வலர்களான அந்தியூர் திருநாவுக்க-ரசு, ஈரோடு காசி, திருப்பூர் திருமூர்த்தி மற்றும் கல்லுாரி மாண-வர்கள் ஈடுபட்டனர். ஆறு குழுக்களாக பிரிந்து நீர்வழி பாதைகள், அடர் வனப்பகுதிகளில் தென்படும் பறவைகளை குறிப்பெடுத்-தனர். தொலைநோக்கி மூலமும், கேமராக்கள் மூலமும் உற்று-நோக்கி பறவைகளை கண்டறிந்தனர்.இதில் பாசையெடுப்பான் குருவி, பச்சை சிட்டு, செம்மார்பு குக்கு-ருவான், பழுப்புத்தலை குக்குருவான், செங்கழுத்து வல்லூறு, மஞ்சள் பிடரி மரங்கொத்தி, வேதிவால் குருவி, நீலக்கண்ணி, பொறி மார்பு சிலம்பன், பெரிய பொன்முதுகு மரங்கொத்தி, மலை மைனா, சிறிய காட்டு ஆந்தை, செம்பழுப்பு வயிற்றுச் சிலம்பன், பழுப்பு மீன் ஆந்தை, நீல பைங்கிளி, ராசாளி பருந்து, சாம்பல் இருவாச்சி, செம்புழை கொண்டை குருவி, பச்சை பஞ்சு-ருட்டான், வெண்தொண்டை சில்லை, செந்தலை பஞ்சுருட்டான், மஞ்சள் தொண்டை சின்னான், பச்சை புறா என, 50க்கும் மேற்-பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இதில் சில அரிய வகை பறவைகள் என்றும், கடந்த ஆண்டை விட அதிக பறவை தென்-பட்டதாகவும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.