ADDED : நவ 13, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, குமலன்குட்டை பகுதியில், ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சொந்தமான குடோன் உள்ளது. காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் ஒரு பறவை காணப்பட்டது.
அப்பகுதியினர் காகங்களை விரட்டிவிட்டு, அப்பறவையை பார்த்தனர். அரிய வகை வெள்ளை ஆந்தை என்பது தெரிந்தது. இதுபற்றி பாம்பு களை மீட்கும் தன்னார்வலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற முருகன், வெள்ளை ஆந்தைக்கு முதலுதவி செய்து, ஈரோடு வனத்துறையில் ஒப்படைத்தார். வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளித்து, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் விடுவித்தனர். இவ்வகை வெள்ளை ஆந்தைகள், மிக அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் என்றும் தெரிவித்தனர்.

