/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளி குடிநீரில் எலி செத்த வாடை? மாணவியரின் அச்சத்துக்கு தேவை தீர்வு
/
அரசு பள்ளி குடிநீரில் எலி செத்த வாடை? மாணவியரின் அச்சத்துக்கு தேவை தீர்வு
அரசு பள்ளி குடிநீரில் எலி செத்த வாடை? மாணவியரின் அச்சத்துக்கு தேவை தீர்வு
அரசு பள்ளி குடிநீரில் எலி செத்த வாடை? மாணவியரின் அச்சத்துக்கு தேவை தீர்வு
ADDED : ஜன 12, 2024 01:32 PM
ஈரோடு: ஈரோட்டில் அரசுப்பள்ளியில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக, மீண்டும் புகார் எழுந்துள்ளது.
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், மாசிமலை ரங்கசாமி கவுண்டர் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,400 மாணவிகள் பயில்கின்றனர். ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தில் பள்ளிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் குடிநீரில், எலி செத்த வாடை வருவதாக, மாணவிகள் புகார் தெரிவித்தனர். தற்போது மீண்டும் அதே வாடை வருவதாக மாணவிகள், பெற்றோர் கூறுகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி கூறியதாவது:
இரு வாரங்களுக்கு முன் மாணவிகள், எலி செத்த வாடை அடிப்பதாக புகார் கூறியதால், கீழ்நிலை தொட்டி, மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்து, மருந்து ஊற்றினோம். புழு, பூச்சி செல்லாத வகையில் மூடிய நிலையில்தான் தொட்டிகள் உள்ளன. ஓராண்டுக்கு முன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு சார்பில் ஆர்.ஓ., அமைக்கப்பட்டது. அதன் வழியே தான் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆர்.ஓ., சிஸ்டத்தையும் ஆய்வு செய்து விட்டோம். எலி செத்த வாடை வருவதாக கூறுவது வெறும் வதந்தி. இவ்வாறு அவர் கூறினார்.
முதல் முறை வந்த புகாரிலேயே, தொட்டிகளை சுத்தம் செய்து விட்ட நிலையில், மீண்டும் புகார் எழுந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல், உரிய ஆய்வு செய்து, மாணவியர் மற்றும் பெற்றோர்களின் அச்சத்தை போக்க வேணடும்.