ADDED : ஜன 29, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், மூங்கில்பாளையம் கிராம பஞ்சா-யத்து, சேர்வுகாரன்பாளையத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்-பாட்டு நிதியில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன வசதிக-ளுடன் கூடிய புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்-டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயக்-குமார், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அ.தி.மு.க., பெருந்-துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், விஜயபுரி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சீனிவாசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

