/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் கடை பணி சான்றிதழ் சரி பார்ப்பு பணி துவக்கம்
/
ரேஷன் கடை பணி சான்றிதழ் சரி பார்ப்பு பணி துவக்கம்
ADDED : நவ 26, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கடை பணி சான்றிதழ்
சரி பார்ப்பு பணி துவக்கம்
ஈரோடு, நவ. 26-
ஈரோடு மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 90 விற்பனையாளர், 90 கட்டுனர் பணிக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. மொத்தம், 7,504 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி, ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் நேற்று தொடங்கியது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் ஊழியர்கள் பணியை துவங்கினர்.
வரும், 29ம் தேதி வரை இப்பணி நடக்கும். விற்பனையாளர்களுக்கு, 28 ல் நேர்முகத்தேர்வும், கட்டுனர் பணிக்கான நேர்முக தேர்வு, 29ம் தேதியும் நடக்கவுள்ளது.