/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு
/
பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு
ADDED : டிச 22, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, டிச. 22-
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதில் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல், 150 கன அடியாக குறைக்கப்பட்டது.
அதேசமயம் கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 2,497 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 99.08 அடி; நீர் இருப்பு, 28 டி.எம்.சி.யாக
இருந்தது.