/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைக்கோவில் பாதை மரங்களில் ஆணி அடித்து ரிப்ளெக்டர் பதிப்பு
/
மலைக்கோவில் பாதை மரங்களில் ஆணி அடித்து ரிப்ளெக்டர் பதிப்பு
மலைக்கோவில் பாதை மரங்களில் ஆணி அடித்து ரிப்ளெக்டர் பதிப்பு
மலைக்கோவில் பாதை மரங்களில் ஆணி அடித்து ரிப்ளெக்டர் பதிப்பு
ADDED : டிச 21, 2025 06:27 AM

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும், ௪ கி.மீ., மலைப்பாதை பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
மலைப்பாதையில் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, எச்சரிக்கை சின்னமான 'ரிப்ளெக்டர்' ஸ்டிக்கர்கள் சாலையோர மரங்களில் ஆணி அடித்து வைத்துள்ளனர். இந்த வகையில், 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி அடித்து பதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா? அல்லது தெரிந்து நடந்ததா? என்று கேள்வி எழுந்துள்ளது. மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்ற வேண்டும்.
அதேசமயம் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்களை வேறு வகையில் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.