/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருப்பூர், பல்லடத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
/
திருப்பூர், பல்லடத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
திருப்பூர், பல்லடத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
திருப்பூர், பல்லடத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : டிச 21, 2025 06:28 AM

திருப்பூர்: ''இரட்டைப்பதிவு, இறந்த வாக்காளர் என, போலியாக தொடர்ந்த வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது; செம்மையான பட்டியலை கொண்டு நடக்கும் தேர்தல்களில், இனி ஓட்டுப்பதிவு சதவீதம் மிகச்சரியாக பிரதிபலிக்கும்; குறிப்பாக, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளில் ஓட்டுப்பதிவு பெருமளவு அதிகரிக்கும்'' என்று அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், மக்கள் தொகை விகித்துக்கு மாறுபட்டதாக வாக்காளர் எண்ணிக்கை இருப்பதாக கருதப்பட்டு வந்தது. மற்ற தொகுதிகளில், வாக்காளர் எண்ணிக்கை உயர்வது மிதமாக இருந்தது. திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும்
பல்லடம் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான தேர்தல் மேற்பார்வையாளர்கள், ஒவ்வொரு ஆண்டும், சிறப்பு கள தணிக்கை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இடம்பெயர்ந்த வாக்காளர், இறந்த வாக்காளர் பெயர் நீக்கப்படாமல் இருந்த காரணங்களால், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டுப்பதிவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது.2021 சட்டசபை தேர்தல்கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், காங்கயம் - 77.29 சதவீதம், தாராபுரம் - 74.14 சதவீதம், உடுமலை - 71.42 சதவீதம், மடத்துக்குளம் - 67.76 சதவீதம், அவிநாசி - 66.82 சதவீதம், பல்லடம் - 66.66 சதவீதம், திருப்பூர் தெற்கு - 62.80 சதவீதம், திருப்பூர் வடக்கு - 62.60 சதவீதம் அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்திருந்தது.2024 லோக்சபா தேர்தல்கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில், 64.81 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்திருந்தது. பெருந்துறை சட்டசபை தொகுதியில், - 73.30 சதவீதம், கோபி - 73.20 சதவீதம், பவானி - 71.88 சதவீதம், அந்தியூர் - 70.21 சதவீதம் அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்திருந்தத. ஆனால், திருப்பூர் வடக்கில், 54.66 சதவீதமும், திருப்பூர் தெற்கில், 54.42 சதவீதம் மட்டுமே பதிவாகி இருந்தது.
ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால், போலி வாக்காளர்களை நீக்க அதிக ஆர்வம் காட்டவில்லை. இறந்த வாக்காளர் பெயர் நீக்க விண்ணப்பித்தாலும், உரிய நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும், குடிபெயர்வது அதிகம் நடந்ததால், புதிய வார்டில் வாக்காளராக மாறினர்; பழைய பெயர் நீக்கப்படவில்லை.
இதன் காரணமாகவும், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு, ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், திருப்பூர் வடக்கு தொகுதியில், 27.3, திருப்பூர் தெற்கில், 32, பல்லடத்தில்,27 சதவீதம் என, 3,10,981 வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகம்திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக அளவு வாக்காளர் பெயர் நீக்கம் இத்தொகுதிகளில் நடந்துள்ளது. மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், 5,63,785 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், இம்மூன்று தொகுதிகளில் மட்டும், 55 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இம்மூன்று தொகுதிகளில் சரிந்த ஓட்டுசதவீதம் தான், மாவட்டத்தின் சதவீதத்தையும் குறைத்தது. செம்மையான வாக்காளர் இறதி பட்டியல் தயாரிக்கப்படும்பட்சத்தில், இனிவரும் தேர்தல்களில், மிகச்சரியான ஓட்டுப்பதிவு சதவீதத்தை கண்டறிய முடியும் என, அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

