/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 ஆண்டுக்கு பிறகு ரெகுலர் ஆர்.டி.ஓ.,
/
2 ஆண்டுக்கு பிறகு ரெகுலர் ஆர்.டி.ஓ.,
ADDED : ஜூலை 22, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி, 2023 மார்ச், 9ல் திருச்செந்துாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் (கிழக்கு) வெங்கட்ரமணி, பெருந்துறை சக்திவேல் ஆகியோர், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர்.
இந்த வரிசையில் நேற்று முன்தினம் வரை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஆர்.டி.ஓ., மோகனப்பிரியா கவனித்து வந்தார். இந்நிலையில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ேஷக் முகமது, கோபிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இரு ஆண்டுகளுக்கு பின், நிரந்தர ஆர்.டி.ஓ., பொறுப்பேற்றதால், ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.