/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொத்து தகராறில் பெண்ணை கொலை செய்த உறவினர் கைது
/
சொத்து தகராறில் பெண்ணை கொலை செய்த உறவினர் கைது
ADDED : டிச 14, 2024 01:43 AM
ஈரோடு, டிச. 14-
ஈரோடு, செட்டிபாளையம், பாரதிபாளையம் முதல் தெருவை சேர்ந்த ஜோதிடர் நல்லசிவம் மனைவி கண்ணம்மாள், 56; நாதகவுண்டன்பாளையத்தில் கண்ணம்மாளுக்கு, சில கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இது தொடர்பாக உறவினர்களுடன் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் கண்ணம்மாளின் சகோதரரின் மைத்துனர் சிவகுமார், நல்லசிவம் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் வந்தார். அப்போது தம்பதியரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் கண்ணம்மாள் பலியானார்.
காயத்துடன் நல்லசிவம் உயிர் தப்பினார். தப்பி ஓடிய சிவக்குமாரை, ஈரோடு தாலுகா போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார், கஸ்பாபேட்டையில் பதுங்கியிருந்த சிவகுமாரை நேற்று கைது செய்தனர்.

