/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனம் மோதி தொழிலாளி பலி சடலத்தை பெற மறுத்த உறவினர்
/
வாகனம் மோதி தொழிலாளி பலி சடலத்தை பெற மறுத்த உறவினர்
வாகனம் மோதி தொழிலாளி பலி சடலத்தை பெற மறுத்த உறவினர்
வாகனம் மோதி தொழிலாளி பலி சடலத்தை பெற மறுத்த உறவினர்
ADDED : ஜூலை 15, 2025 01:28 AM
தாராபுரம் கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த தொழிலாளி தங்கவேல், 52; டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், மூலனுாரை அடுத்த கம்பளியம்பட்டி அருகே சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த தங்கவேல், மேல் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று உடற்கூறு பரிசோதனை நடந்தது. அப்போது விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்தால்தான் உடலை பெறுவோம் என்று கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனனர். தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், சமரசம் செய்தனர். இச்சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனை முன் பரபரப்பு நிலவியது.