/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டேரிப்பள்ளம் அணையில் உபரி நீர் வெளியேற்றம்
/
குண்டேரிப்பள்ளம் அணையில் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 16, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் : அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால், டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடிவாரத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு, நேற்று நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணை மொத்த கொள்ளளவான, 41.75 அடியை எட்டிய நிலையில், உபரிநீர் வெளியேறியது. நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து, 256 கன அடியாக இருந்தது. வரத்தாகும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.