/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைப்பு
/
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைப்பு
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைப்பு
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைப்பு
ADDED : டிச 06, 2024 07:45 AM
ஈரோடு: தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்று, 1,460 பிரட் பாக்கெட்கள், 3,990 குடிநீர் பாட்டில்கள், 2,420 பிஸ்கெட் பாக்கெட்கள், 3,600 மூட்டை அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, எண்ணெய் என, 4.34 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்களிடம் சேகரிக்கப்பட்டது. இப்பொருட்கள் கொண்ட வாகனத்தை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா அனுப்பி வைத்தார். தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட சிலர் உடனிருந்தனர்.
* கடலுார், விழுப்புரம் மாவட்டங்களுக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 3 கன்டெய்னரில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளின் பயணத்தை, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், காங்கேயம் தாசில்தார் மோகன், காங்கேயம் ஒன்றியசெயலாளர் சிவானந்தன், நகரசெயலாளர் சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஈரோடு மாநகராட்சி சார்பில் உணவு பொருட்கள், 8 டன் அளவிற்கு நேற்று சிறப்பு வாகனத்தில் விழுப்புரம் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மனீஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் ஆனந்தன், சோமசுந்தரம், செயற்பொறியாளர் பிச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.