ADDED : ஆக 13, 2024 07:48 AM
புன்செய்புளியம்பட்டி: அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பசுமை நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
புன்செய்புளியம்பட்டி கே.வி.கே., அரசு மேல்நிலைப் பள்ளியில், 1992---94ல் பிளஸ் ௨வில் தொழிற்கல்வி படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடந்தது. தங்களது ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாரிமுத்து, கலைச்செல்வி, சரவணபவன், காந்தி, சுப்பிரமணியன் ஆகியோர், 30 ஆண்டுக்கு பின் மாணவர்களை அதே வகுப்பறையில் சந்தித்தது குறித்து மகிழ்ந்தனர்.
அதனை தொடர்ந்து அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, ஆசிரியர்கள் பேசினர். பள்ளி வளர்ச்சி நிதியாக, 10 ஆயிரம் ரூபாயை முன்னாள் மாணவர்கள் வழங்கி, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.