/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் சாய்ந்த புங்கன் மரம் அகற்றம்
/
வாய்க்காலில் சாய்ந்த புங்கன் மரம் அகற்றம்
ADDED : ஏப் 07, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பாரியூர் பகுதியில் கொட்டிய கனமழையால், கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகத்தில், வன்னிமர விநா-யகர் கோவில் அருகே இருந்த, 50 ஆண்டு பழமையான புங்கன்-மரம் வேருடன் தடப்பள்ளி வாய்க்காலின் குறுக்கே சாய்ந்தது.
இதனால் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், வாய்க்காலின் குறுக்கே தண்ணீர் செல்ல தடையாக இருந்த, புங்கன்மரத்தின் அடிப்பகுதி மற்றும் கிளைகளை நேற்று வெட்டி அகற்றினர்.
அதன்பின் மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மூன்று மணி நேரம் போராடி அகற்றினர். அதேசமயம் இரு பாசன வாய்க்கா-லிலும், இரண்டாவது நாளாக பாசனத்துக்கு நேற்றும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

