/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தவிளம்பர பதாகைகள் அகற்றம்
/
அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தவிளம்பர பதாகைகள் அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தவிளம்பர பதாகைகள் அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தவிளம்பர பதாகைகள் அகற்றம்
ADDED : மே 01, 2025 01:39 AM
ஈரோடுஈரோடு, காந்திஜி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, விளம்பர பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. மாநகராட்சியில் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட சைசில், விளம்பர பதாகைகளை வைக்க வேண்டும் என்று மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வணிக, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியற்ற பதாகைகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. விளம்பர பதாகைகளை அகற்றாவிடில் மாநகராட்சி நிர்வாகம் அகற்றும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலர் விளம்பர பதாகைகளை அகற்றி கொள்ளவில்லை.
இந்நிலையில், ஈரோடு காந்திஜி சாலையில் ப.செ.பார்க் முதல் காளைமாடு சிலை வரையில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, விளம்பர பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.