ADDED : ஜூலை 09, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி மணிக்கூண்டு, மீனாட்சி சுந்தரனார் சாலை, மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விளம்பர போர்டுகளை போக்குவரத்திற்கு இடையூறாகவும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார் போனது. இதுபோன்ற விளம்பர போர்டுகளை அகற்ற ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார். இதையடுத்து சத்தி ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, காவேரி ரோடு, பன்னீர்செல்வம் பார்க் என பல்வேறு இடங்களில், சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றி, வாகனத்தில் எடுத்து சென்றனர்.